Categories
உலக செய்திகள்

நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகிகள் சர்ச்சை கருத்து… “இந்தியா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்”…. பதிலடி கொடுத்த இந்திய தூதர்…!!!

பாஜக நிர்வாகிகளான நுபர் ஷர்ம நவீன்குமார் ஜிண்டல் ஆகிய நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்து உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இடையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த வாரம் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் குறித்து எதிராக கூறிய கருத்து சர்ச்சையை உள்ளாகியது. இதனால் இவரை இடைநீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்தது. அதனைப் போல பாஜகவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டல் நபிகள் நாயகத்துக்கு எதிராக டுவிட் செய்தார் அது அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து அந்த டுவிட்டை அழித்து செய்துவிட்டார். இந்த இரு கருத்துக்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்திய பொருட்களை தடைசெய்ய வேண்டும் என்ற ஹேஸ்டேக் அரபு நாடுகளில் டிரெண்டாக மாறியது. ஈரான், கத்தார், குவைத் போன்ற நாடுகள் இந்த கருத்துக்களுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக தீபக் மிட்டல் அழைத்துப் பேசி, அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், “நபிகள் நாயகத்துக்கு எதிராக இந்தியாவின் ஆளும் கட்சியை சேர்ந்த இருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து இந்திய அரசின் கண்டனத்தையும், பொது மன்னிப்பை எதிர்பார்க்கிறோம். இப்படி இஸ்லாத்திற்கு எதிரான பேச்சுகளை எந்தவித தண்டனையும் இல்லாமல் அப்படியே விடுவது மனித உரிமைகளுக்கு ஆபத்தானதாக அமையும். அதுமட்டுமில்லாமல் பாரபட்சத்துக்கும் ஓரவஞ்சனைக்கும் வழிவகுக்கும். அதுமட்டுமில்லாம்மல் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும்” என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு இந்திய தூதர் தீபக் விட்டால் பதிலளித்துள்ளார். அதாவது, “இந்த கருத்துகளுக்கும் இந்திய அரசுக்கு எந்த வித சம்பந்தமில்லை. எங்களின் கலாச்சாரத்தின் படியும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையின்படி இந்திய அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது”. என்று கூறினார். ஏற்கனவே தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக தலைவர் நுபுர் சர்மா விளக்கம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |