Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நந்தன் கால்வாய் திட்டம்” 100% நான் பொறுப்பு…. அமைச்சரின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாதம் பூண்டி பகுதியில் இருந்து பனைமலை பேட்டை வரை நந்தன் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் மூலமாக மாவட்ட முழுவதும் உள்ள 22 ஏரிகளுக்கு தண்ணீர் வருவதால், 5300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கால்வாயை சீரமைக்க வேண்டும் என்பது விவசாயிகளை நீண்ட நாள் கனவாகவும் இருந்தது. இந்நிலையில் தற்போது 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கால்வாய் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சீரமைப்பு பணிகளை தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து விவசாயிகள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் ஆய்வுக்கு பிறகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் ஏற்று 100% விவசாயிகள் திருப்தி அடையும் வகையில் கால்வாய் சீரமைக்கப்படும் எனவும், அதற்கு அமைச்சர் என்ற முறையில் நான் முழு பொறுப்பாவேன் எனவும் கூறினார்.

Categories

Tech |