சந்தானத்தின் சபாபதி படத்தின் வியாபாரத்திற்கு நடிகர் ஆர்யா உதவி செய்துள்ளார் .
தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சந்தானம், ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். இதைத்தொடர்ந்து ராஜா ராணி, சேட்டை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட திரைப்படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினர் . தற்போது நடிகர் சந்தானம் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் .
அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. தந்தை-மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானத்திற்கு அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார் . இந்நிலையில் ரிலீசுக்கு தயாராகி வரும் சபாபதி படத்தின் வியாபாரத்திற்கு நடிகர் ஆர்யா உதவி செய்துள்ளார். நட்பிற்கு உதாரணமாக நடந்துகொண்ட ஆர்யாவை நடிகர் சந்தானம் கட்டிப்பிடித்து கண்கலங்கினாராம்.