சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள ஆப்பனூர் தெற்கு கொட்டகை பகுதியில் துரைமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற துரைமுருகன் தனது நண்பர்களை பார்ப்பதார்க்காக இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி அருகே இருந்த பெட்ரோல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்ற கார் எதிர்பாரதவிதமாக துரைமுருகன் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் துரைமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ராமநாதபுரம் நகர் காவல்துறையினர் துரைமுருகன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காரை ஒட்டி சென்ற மதுரையை சேர்ந்த சத்யராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.