Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. விபத்தில் சிக்கி பலியான வாலிபர்கள்….. கோவையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பி.கே.எஸ் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணாளன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் சந்தோஷ்(22) என்பவரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் குணாளன், சந்தோஷ் மற்றும் தனது நண்பர்களுடன் இணைந்து ஆழியாறுக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு உள்ள அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் பொள்ளாச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கலக்குறிச்சியில் இருக்கும் தனியார் கல்லூரி முன்பு அருகே முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்றனர்.

அப்போது எதிரே ஒரு வாகனம் வந்ததால் சந்தோஷ் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குணாளன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |