சுமை தூக்கும் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி சேனையாபுரம் காலனியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமைதூக்கும் தொழிலாளியான பார்த்திபன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து பார்த்திபன் தனது நண்பரான துரைப்பாண்டி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் கள்ளப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த மர்ம கும்பல் பார்த்திபனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை தடுக்க வந்த துரைபாண்டியனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் துரைப்பாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.