தமிழகத்தின் 35 வது அமைச்சராக இன்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகரும், உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான விஷால், என்னுடைய நண்பன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி பெற்றதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். வாரிசு அரசியல் என்பது மேலோட்டமாக பார்ப்பது. அவருக்கு கொடுக்கக்கூடிய பதவியை தகுதியாக பார்க்கிறாரா என்பதை கருதியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.