விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 20 வயதான பிரபுவும், சீனிவாசனும் இணைபிரியாத நண்பர்கள் ஆவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நண்பர்கள் இரண்டு பேரும் சென்ற பைக் விபத்தில் சிக்கி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையில் காயங்களுடன் பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் பிரபு தன் நண்பன் சீனிவாசனின் இறப்புக்கு தானே காரணம் என்று நினைத்து வந்துள்ளார்.
இதனால் பிரபு தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதன்பின் ஒருவழியாக பிரபுவை காப்பாற்றி உள்ளனர். இருப்பினும் அன்று இரவே பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு நண்பன் இறந்ததற்கு தானே காரணம் என்று பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.