மிளகாய், சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோதாதே, போங்கு, சந்தி முனி, கர்ணன் போன்ற படங்களில் நடித்ததன் மூலமாக முன்னணி கதாநாயகராக வலம் வந்தவர் நட்டி என்ற நட்ராஜ். இவர் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனை தொடர்ந்து நட்டி நடிப்பில் சம்பவம், இன்ஃபினிட்டி போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகிறது.
இதற்கு இடையே நட்டி நடிப்பில் நடித்து உருவாகி இருக்கின்ற திரைப்படம் வெப். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரூன் இயக்கி இருக்கின்றார். இதில் காளி மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதனை வேலன் ப்ரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் வி எம் முனிவேலன் தயாரித்திருக்கின்றார். இந்த படத்தை கிறிஸ்டோபர் ஜோசப் ஒலிப்பதிவு செய்ய கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கின்றார். இந்த சூழலில் வெப் திரைப்படத்தின் டீசரை பட குழு வெளியிட்டு இருக்கிறது விறுவிறுப்பாக இடம்பெற்றுள்ள இந்த டீசர் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.