Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு”….. கள்ளக்குறிச்சியில் மாதிரி தேர்வு…. செய்தி குறிப்பில் வெளியிட்ட ஆட்சியர்….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு பற்றி ஆட்சியர் தகவலை செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சு உள்ளிட்ட பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. இத்தேர்வானது வருகின்ற 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்றது.

இதனால் இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் விதமாக இலவச மாதிரி தேர்வுகள் நாளை மற்றும் வருகின்ற 17ஆம் தேதி உள்ளிட்ட இரண்டு நாட்கள் சேலம் மெயின் ரோட்டில் உள்ள இந்திலியில் இருக்கும் ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற இருக்கிறது. ஆகையால் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அல்லது http://shorturl.at/fJSZ3 என்ற இணையதள வழியாகவும் பதிவு செய்தவர்கள் இந்த இலவச தேர்வை எழுதி பயன்பெறலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |