அதிநவீன ஸ்கேன் சென்டர் திறப்பு விழா நடைபெற்றுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் வீனஸ் என்ற பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் அருகே புதிதாக அதிநவீன வசதிகளுடன் ஆராதியா என்ற ஸ்கேன் சென்டர் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மருத்துவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவர் ரம்யா, விருதாச்சலம் தொழிலதிபர் சங்கர், ராணி, எலும்பு முறிவு மருத்துவர் பாரதி செல்வன், துறை, கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ கிருஷ்ணா, கிராண்ட் மாஷால் உரிமையாளர் சம்பத் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் தொழிலதிபர் சேகர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதனை எடுத்து மருத்துவர் ஆனந்த் கூறியதாவது. இந்த அதிநவீன ஸ்கேன் சென்டரில் சி.டி. ஸ்கேன், ரத்த பரிசோதனை மையம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி. உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது என்று கூறியுள்ளார்.