ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து வாழ்வாதார திட்ட இயக்கத்தின் கீழ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் இயக்கத்தின் கூடுதல் இயக்குனர் முத்துமீனாள், திட்ட இயக்குனர் வானதி, வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கயற்கண்ணி,மேலாளர் ராஜேந்திரன், வட்டார இயக்க மேலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் கூடுதல் இயக்குனர் முத்துமீனாள் எஸ்.புதூர் ஒன்றியம் மேலவண்ணாரிருப்பு ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 6 லட்ச ரூபாய் கடன் உதவி வழங்கினார். இதனையடுத்து மக்களைத் தேடிய மருத்துவ திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் கலந்துரையாடியுள்ளார். மேலும் மகளிர் திட்டம் மூலம் செயல்படும் இ-சேவை மையம் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்துள்ளார்.