Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற முன்னாள் படை வீரர்கள் குறைதீர்ப்பு கூட்டம்…. கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னாள் படை வீரர்கள் குறை தீர்ப்பு  கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து முன்னாள் படை வீரர்கள் குறை தீர்ப்பு   கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றுதல், நிலம் அளவீடு செய்தல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் 23 மனுக்களை  பெற்று கொண்டார். இதனையடுத்து 2 பேருக்கு ஈமச்சடங்கு மானியமாக தலா 10 ஆயிரம்  ரூபாய் வழங்கியுள்ளார்.

Categories

Tech |