கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் பலர் கலந்துகொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோட்டூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கியுள்ளார். இதற்கு வட்டார மருத்துவ அலுவலர், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ரத்தப் பரிசோதனை, ஈ.சி.ஜி. பரிசோதனை, ஸ்கேன், பொது மருத்துவம், கண் மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் மருத்துவ அலுவலர், கோட்டூர் ஊராட்சி செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.