இளங்கலை மற்றும் முதுகலை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கல்விக்குழும தாளாளர் அப்துல்கபூர், தலைவர் அன்வர் கபீர், செயலாளர் ஹீமாயூன் கபீர், கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி, கல்விக்குழு தலைமை செயல் அலுவலர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி ரவி, துணை முதல்வர் இளஞ்செழியன், ராஜா, ஒருங்கிணைப்பாளர் லதா, பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் திருச்செல்வம், சேகர் ஆகியோர் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலை படித்து முடித்த 953 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டியுள்ளார்.