Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தடகள போட்டி…. முதலிடம் பெற்ற மாணவர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

தடகள போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியிலுள்ள கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் கல்வி மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து போட்டியில் கோவில்பட்டி கவுணியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் அணிகள் முதலிடம் பெற்றது. இதேபோன்று பெண்கள் பிரிவில் இளையோர், மிக மூத்தோர் போட்டியில் முதலிடம் பெற்றனர்.

மேலும் இறகு பந்து போட்டியில் ஆண், பெண் ஒற்றையர் இரட்டையர் போட்டியில் முதலிடமும், எறிபந்து போட்டியில் ஆண்கள் 2-வது இடமும் பெற்றனர். இவர்கள் அனைவரும் மண்டல போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுணியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மெகர் பானு, முதல்வர் பாலு, உடற்கல்வி ஆசிரியர்கள் மகேந்திரன், பகவதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Categories

Tech |