Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

கோவில் புனரமைப்பு பணிகள் தொடர்பான  ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து கோவில்கள் புனரமைப்பு பணிகள் தொடர்பான  ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கமிஷனர் லட்சுமணன், அரசு சிற்ப மற்றும் கட்டிடக்கலை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை செயற்பொறியாளர் சுந்தரப்பன், கோவில் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் கூட்டத்தில்   ராமர் பஜனை கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அணைக்கட்டு வெட்டுவாணம் மற்றும் எல்லையம்மன் கோவில், வரசக்தி விநாயகர் கோவில், அகத்தீஸ்வரர் மற்றும் வரதராஜபெருமாள் கோவில்  உள்ளிட்ட 25 கோவில்களின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும்  கோவில்களின் ஆய்வறிக்கை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் . அவர்கள் ஒப்புதல் அளித்து நிதி வழங்கிய பிறகு கோவில்களில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |