பொது வேலை நிறுத்தம் குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வளாகம், ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் ஆகியோரிடம் கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழகம், சி.ஐ.டி.யூ, ஏ. ஐ.டி. யூ. சி, ஐ. என். டி. யூ.சி சார்பில் பொது வேலை நிறுத்தத்தை விளக்கும் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் போக்குவரத்து கழக கிளை செயலாளர் ராஜேந்திரன், மாநில செயலாளர் வெங்கடேசன், நிர்வாகி செங்குட்டுவன், மகேந்திரமூர்த்தி, ஐ.என்.டி.யூ.சி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகி பாரத், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் சேவையா, போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் மதிவாணன், அரசு போக்குவரத்து சங்க செயலாளர் கஸ்தூரி, பொருளாளர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொது வேலை நிறுத்தம் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியுள்ளனர்.