கொடைக்கானலில் கோடைகால விழா நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு குளு குளு சீசனை ஒட்டி கடந்த 24-ஆம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை அமைச்சர் பெரியசாமி, எம். ஆர். கே. பன்னீர்செல்வம், எம். மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
அதன்பிறகு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பூங்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், நடன நாட்டியம், மேஜிக் ஷோ, தேவராட்டம், சேவையாட்டம், கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைக்கும் போட்டி ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டும், பார்த்தும் ரசித்துள்ளனர். இந்நிலையில் பானை உடைக்கும் போட்டியில் வெற்றி பெற்ற நஸ்ரின் என்ற பெண்ணிற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.