Categories
உலக செய்திகள்

நடுவானில் காதல் ப்ரொபோஸ்…. வாயில் வைத்திருந்த பொருள்…. ஆச்சரியமடைந்த காதலி….!!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக காதலை வெளிப்படுத்துவார்கள் அதேபோன்றே இந்த இளைஞர் நடுவானில் ஸ்கை டைவிங் செய்து கொண்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

சாகச விளையாட்டு ஆர்வளர் மற்றும் விமான பைலட் ரே தனது தோழியுடன் ஸ்கை டைவிங் மேற்கொண்டுள்ளார். பொதுவாக ஒவ்வொருவரும் தனது காதலை புது விதத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள் அதேபோன்று இந்த இளைஞர் தனது காதலை நடுவானில் பறந்து கொண்ட படியே வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்கை டைவிங் போய்க்கொண்டிருக்கும் வழியில் தனது வாயில் மறைத்து வைத்து இருந்த மோதிரத்தை கேட்டியிடம் காட்டி தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ரேயின் காதலை எதிர்பார்க்காத கேட்டி மகிழ்ச்சியில் உடனே காதலை ஏற்றுக்கொண்டார். இதை ரே வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதை பார்த்து அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CLyADR8n5e8/?utm_source=ig_web_copy_link

Categories

Tech |