நடுவானில் வானுர்தி பறந்து கொண்டிருக்கும் போது திடீரென விமானி மயக்கமடைந்துள்ளார்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகருக்கு பஹாமாஸ் தீவில் இருந்து ஒரு சிறிய ரக வானூர்தி ஒன்று சென்றுள்ளது. இந்த வானூர்தி வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென விமானி மயக்கம் அடைந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணி ஒருவர் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அந்தப் பயணியிடம் எப்படி விமானத்தை ஓட்ட வேண்டும் என கூறியுள்ளனர். அதன்படி பயணி விமானத்தை ஓட்டி பத்திரமாக தரை இறக்கி விட்டார். அதன்பிறகு பயணியிடம் நடத்திய விசாரணையில் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை பார்ப்பதற்காக சென்றது தெரியவந்தது. மேலும் விமானி மயங்கியவுடன் வானுர்தியை பத்திரமாக ஓட்டி தரையிறக்கிய நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.