Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. சென்னையில் பரபரப்பு…!!

நடுரோட்டில் சென்று கொண்டிருந்த போது லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள வல்லூர் அனல் மின் நிலையம் அருகே இருக்கும் ஒரு பகுதியிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சூரப்பட்டு பகுதியில் இருக்கும் குடோனுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாதவரம் ரவுண்டானா அருகே ஜி.என்.டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரியின் முன் பகுதியில் இருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் லாரி ஓட்டுனர் உடனடியாக கீழே இறங்கிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |