Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. நொடியில் உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் கவிபுரம் பகுதியில் கோகுல்நாத்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் ஸ்ரீ நிஷா(2) என்ற குழந்தையும் இருக்கின்றனர். நேற்று மாலை கோகுல்தாஸ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஏற்காடு மலை அடிவாரம் பகுதிக்கு சென்று காரில் இருந்தபடி சிறிது நேரம் சுற்றி பார்த்துள்ளனர்.

இதனையடுத்து ஊருக்கு செல்வதற்காக கோகுல்ராஜ் அஸ்தம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மத்திய சட்ட கல்லூரி அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த கோகுல் ராஜ் உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு மனைவி மற்றும் குழந்தையுடன் வேகமாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார் இஞ்சினில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |