Categories
சினிமா தமிழ் சினிமா

நடிப்புக்கு முழுக்கு போடும் நயன்தாரா?….. காரணாம் இதுதானாம்….. அவ்ளோ லவ்வா?…..!!!!

நடிகை நயன்தாரா சினிமாவிலிருந்து விரைவில் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் பூர்வீகமாக கொண்ட நடிகை நயன்தாரா முதலில் ஏர்ஹோஸ்டராக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தற்போது ரசிகர்களால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் அளவிற்கு புகழ் பெற்றுள்ளார். இவர் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று இவர்கள் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் நடிகை நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் முடித்துக்கொண்டு நயன்தாரா சினிமாவிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நயன்தாரா தனது கழுத்தில் உள்ள தாலியை எந்த காரணத்திற்காகவும் கழட்டக்கூடாது என்று முடிவில் உள்ளாராம். திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் மஞ்சள் கயிற்றை மாற்றாமல் உள்ளார் நயன்தாரா.

மேலும் ஹனிமூன் சென்ற இடத்திலும் மஞ்சள் கயிறுடனே போட்டோ சூட் எடுத்து பகிர்ந்து வருகிறார். மாடன் உடையிலும் மஞ்சள் கயிற்றை மறைக்காமல் போட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் சினிமாவில் சில காட்சிகளில் நடிக்கும்போது தாலியை கழட்ட வேண்டிய சூழல் ஏற்படும். அதனை நயன்தாரா விரும்பவில்லையாம். கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு நடிப்புக்கு குட் பாய் சொல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் விக்கி மேல் உங்களுக்கு அவ்வளவு பாசமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |