அறிமுக இயக்குனர் ஜஸ்டின்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் புது திரைப்படத்தில் “மெட்ராஸ்” படத்தில் ஜானியாக தோன்றி அனைவரையும் கவர்ந்த நடிகர் ஹரி கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார். இந்தபடத்தில் ஹீரோயினியாக நடிகை ஷீலாராஜ் குமார் நடிக்கிறார். கோல்டன்சுரேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு குமரன் ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கட்ரமணன் இந்த படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இதையடுத்து சிவ சங்கர் வசனம் எழுதுகிறார்.
இத்திரைப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் இன்று (ஜூலை-6) நடந்தது. இயக்குனர் பா.ரஞ்சித் இந்த விழாவில் பங்கேற்று இந்த பட பணிகளை தொடங்கி வைத்தார். நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்கையில் நடைபெறும் எதார்த்தமான கதை அம்சம் கொண்ட படமாக உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழ இருக்கிறது. ஆகவே விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது.