Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை வாணி போஜனின் ‘மலேசியா டூ அம்னீஷியா’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

வாணி போஜன், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள மலேசியா டூ அம்னீஷியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.‌

சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். இதையடுத்து இவர் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தாலும் இவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து டிரிபிள்ஸ் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. மேலும் நடிகர் வைபவ் நடிப்பில் ஓடிடி-யில் வெளியான லாக்கப் படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் வைபவ், வாணி போஜன் இருவரும் இணைந்து  ஜீ 5 தளத்திற்காக ஒரு படத்தில் நடித்துள்ளனர். மலேசியா டூ அம்னீஷியா என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த  படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படம் வருகிற மே 28-ஆம் தேதி ஜீ5 தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |