பிரபல நடிகையின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரோஜா 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இதன் காரணமாக சினிமாவுக்கு ரோஜா குட்பை சொல்லிவிட்டார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூ மாலிகா திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று தற்போது சில தகவல்கள் பரவி வருகிறது.
இதற்காக நடிகை ரோஜாவும் அவருடைய கணவர் செல்வமணியும் மகள் அனுஷுவுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடிப்பு பயிற்சி மேற்கொள்வதற்காக அன்ஷுவுக்கு சீட் கிடைத்துள்ளதாகவும், தன்னுடைய படிப்பை முடித்தவுடன் திரைப்படங்களில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய மகளை கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தமிழ் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தன்னிடம் கேட்டதாக ரோஜா ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகவும்.