Categories
சினிமா

“நடிகை மீனாவின் கணவர் மறைவு”…. சமூகவலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்ட தே.மு.தி.க. தலைவர்…!!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(48) நேற்றிரவு காலமானார்.  சென்ற 2009 ஆம் வருடம் வித்யாசாகரை, மீனா திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இதில் நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னை சைதாப் பேட்டையில் வித்யாசாகர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றுகாலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபு தேவா, சுந்தர்.சி மற்றும் நாசர் உட்பட பலர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் நடிகர் மற்றும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மீனாவின் கணவர் மறைவு தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “நடிகை மீனாவின் கணவர் மரணமடைந்தார் என்ற செய்திகேட்டு பெரும் அதிர்ச்சி மற்றும் வேதனை அடைந்தேன். சேதுபதி ஐபிஎஸ், வானத்தை போல, பெரியண்ணா, உளவுத்துறை, மரியாதை, தேவன் உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடிகை மீனா என்னுடன் சேர்ந்து நடித்துள்ளார். மீனாவின் கணவர் திடீரென்று மரணம் என்னை மட்டுமல்லாது ஓட்டுமொத்த திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. வேதனையின் விளிம்பில் உள்ள நடிகை மீனாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என விஜயகாந்த் பதிவிட்டு இருக்கிறார்.

Categories

Tech |