மாளவிகா மோகனன் தனது கிளாமர் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு நடிகையான மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
‘Urvashi’🌸
From a faraway time in a faraway land 💕 pic.twitter.com/bfV2xQNG9l— Malavika Mohanan (@MalavikaM_) October 6, 2021
மேலும் மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மாளவிகா மோகனன் தனது கிளாமர் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.