Categories
சினிமா

நடிகை மரணம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கணவர் அதிரடி கைது….!!!!

கேரள மாநிலமான காசர் கோட்டையை சேர்ந்தவர் மாடல் அழகி சகானா (20). இவர் மாடலிங்கோடு மலையாள திரைப்படங்களிலும் நடித்து வந்தார். சென்ற வருடம் இவர் சஜாத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். முன்பாக இவர்களின் திருமணத்தை ஏற்க மறுப்பு தெரிவித்த சகானாவின் குடும்பத்தினர், பின் அதனை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் அடிக்கடி சகானா வீட்டிற்கு சென்று வந்தனர். இதில் சகானா நடிக்க வந்த பிறகு கோழிக்கோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவருடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இவர்களின் வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது. இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, சகானா, அவரது கணவரின் மடியில் பிணமாக கிடந்தார்.

இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் சகானாவின் உறவினர்களும் தகவலறிந்து அங்கு சென்றனர். அதன்பின் உறவினர்கள் சகானாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது கணவர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டினர். இதனிடையே அங்கு வந்த காவல்துறையினர் சகானாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் காவல்துறையினர் சகானாவின் படுக்கை அறையையும் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா மற்றும் சில போதை பொருட்கள் இருந்தது. அதை கைப்பற்றிய காவல்துறையினர் இது பற்றி அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் சகானாமற்றும் அவரது கணவர் இருவரும் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அவர்களை வீட்டைகாலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் ஏற்கனவே கூறி இருந்ததாகவும் தெரிவித்தனர். இதனிடையே பிரேத பரிசோதனையில் சகானாவின் உடலில் சிறுகாயங்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிக்கையை மருத்துவர்கள் காவல்துறையினரிடம் அளித்துள்ளனர். அதனை போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது முதற்கட்டமாக அவர்கள் சகானாவின் கணவர் சஜாத்தை அதிரடியாக கைது செய்தனர். அதன்பின் அவரிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அப்போது சகானாவின் சாவு தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என்று தெரிகிறது.

Categories

Tech |