நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிகண் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் அஜ்மல் அமீர் வில்லனாக நடித்துள்ளார்.சமீபத்தில் நெற்றிக்கண் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
#Netrikann Sneak Peak🎥 Streaming from Aug 13th https://t.co/gzYrsox6Qh
— Nayanthara✨ (@NayantharaU) August 6, 2021
பார்வையற்ற பெண்ணாக இருந்தும் சீரியல் கொலைகாரன் ஒருவனை கண்டுபிடிக்க நயன்தாரா எப்படி உதவுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. மேலும் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்த படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் அசத்தலான ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.