Categories
தேசிய செய்திகள்

நடிகை டாப்சி, அனுராக்‍ காஷ்யப் வீடுகளில் ரெய்டு – பல்வேறு தரப்பினரும் கண்டனம்

பாலிவுட் பிரபலங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் பின்னணியில் மத்திய பாரதிய ஜனதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்துள்ளனர்.

பாண்டம் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், விகாஷ் பெயில், நடிகை டாப்ஸி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமாக மும்பை மற்றும் புனேயில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம்  சோதனை நடத்தினர். கோவாவில் படப்பிடிப்பில் இருந்த காசியப் மற்றும் டாப்சியிடம் விசாரணையும் மேற்கொண்டனர். வருமானம் வரித் துறையினரின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகள் இந்த அளவிற்கு தவறாக பயன்படுத்தப்படுவதை இந்தியா இதற்க்கு முன் பார்த்ததில்லை என்று மூத்த வழக்கறிஞரும், சமூக செயல்பாட்டாளருமான திரு பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். தங்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், திரை பிரபலங்களை மத்திய அரசு மிரட்டுவதாக ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் தேஜஸ்ஸ்ரீரி யாதவ் கூறுகிறார். மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோரின் குரலை ஒடுக்க வருமான வரித்துறை மூலம் பாஜக முயற்சிப்பதாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும்,  மகாராஷ்டிரா அமைச்சருமான திரு நவாப் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |