தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர், ஜெனிலியா. இந்தி, தெலுங்கு. மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள. தனது சுட்டிதனமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தார். 10 வருடங்களுக்கு முன்பு நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இதன்பிறகு ஜெனிலியா சினிமாவில் நடிக்கவில்லை. முழுமையான குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் ஜெனிலியாவுக்கு அவரது கணவர் பிஎம்டபிள்யூ சொகுசு கார் பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு 1.40 கோடி என்று கூறப்படுகிறது.