Categories
சினிமா

நடிகை செய்யும் வேலையா இது….?? காரித்துப்பும் நெட்டிசன்கள்…. அப்படி என்னப்பா இவங்க பண்ணாங்க…!!!

விஸ்கி விளம்பரத்தில் நடித்த நடிகை நிதி அகர்வாலை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஈஸ்வரன் படத்தின் மூலம் நிதி அகர்வால் சினிமாவில் அறிமுகமானார் .இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நிதி விஸ்கி பிராண்ட் ஒன்றிற்கு இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் விஸ்கியை க்ளாசில் ஊற்றி அதனை முகர்ந்து பார்த்து செம என்று கூறுவது போல இருந்தது அந்த வீடியோ. இதனைப் பார்த்த பலரும் நிதியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அதிலும் சிலர் “சிம்பு குடிப்பதை நிறுத்தி விட்டார். அவர் பட நடிகை விஸ்கியை விளம்பரம் செய்கிறீர். உதய்ணா, உங்கள் பட ஹீரோயின் செய்யும் காரியத்தை பார்த்தீங்களா?. அது சரி, நீங்கள் என்ன செய்வீர்கள். பணத்திற்காக இப்படியெல்லாமா விளம்பரம் செய்வீங்க இருந்தாலும் இதெல்லாம் தப்பு”. எனக் கூறி அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Categories

Tech |