சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் தேதி தனியார் விடுதி ஒன்றில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரின் கணவர் ஹேம்நாத் மற்றும் பெற்றோர் உள்ளவர்களிடம் விசாரணைநடத்திய பின்னர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் எழுந்த நிலையில் அவரின் கணவர் ஹேம்நாத் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் 60 நாட்கள் சிறையில் இருந்து அவர் ஜாமீனில் வெளிவந்தார்.இதனை தொடர்ந்து அவரின் சாமியை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஹேம்நாத் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.அதாவது சித்ரா தற்கொலை வழக்கில் பலருக்கும் தொடர்பிருப்பதாக அவர் கூறி வந்த நிலையில் தற்போது சித்ரா மரணத்தில் விஜய் டிவியின் விஜே ரக்ஷனுக்கு தொடர்பு இருப்பதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கான ஆதாரம் நண்பர் ரோகித் இடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் வி.ஜே ரக்ஷனும் சென்னை அண்ணாநகர் விமலா மெஸ் ஓனர் செல்வமும் சித்ராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்களா இல்லை பணம் தொல்லை கொடுத்தார்களா என்பது நண்பர் ரோகித்தை விசாரித்தால் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.