Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா தற்கொலை… வெளியான ஆடியோ பதிவு… பெரும் பரபரப்பு தகவல்…!!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில், சித்ரா மாமனாரிடம் பேசிய குரல் பதிவை ஆதாரமாக வைத்து ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீரியல் நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்ராவின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்தன. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தார்கள். இந்நிலையில் சித்ராவின் தற்கொலை சம்பவம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஹேம்நாத் தன்னை சித்திரவதை செய்வதாக சித்ரா தனது மாமனாரிடம் பேசிய குரல் பதிவை ஆதாரமாக வைத்து சித்ராவின் கணவரை கைது செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி ஹேம்நாத் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்டவர் என்பதும், பல பப்புகளில் விடிய விடிய போதையில் பொழுதுபோக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |