Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சாயிஷாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நடிகை சாய்ஷா தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகை சாயிஷா நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதைத் தொடர்ந்து இவர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், ஆர்யாவின் கஜினிகாந்த் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். இதில் கஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பின்போது ஆர்யாவுக்கும் சாய்சாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த டெடி திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை சாய்ஷா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில் தனது தந்தையுடன் சாய்ஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .

Categories

Tech |