குக் வித் கோமாளி பிரபலம் பவித்ராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளனர். மேலும் இந்த சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பவித்ரா ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் கதாநாயகியாக நடித்த சமந்தா போல் வேடமிட்டு பவித்ரா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. சமந்தாவும், பவித்ராவும் ஒரே மாதிரி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.