பிரபல நடிகை சமந்தா தொடர்ந்து நடித்து வரக்கூடிய திரைப்படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக முடிந்துவருகிறது. எனினும் குணசேகர் இயக்கத்தில் அவர் நடித்துவரும் சாகுந்தலம் திரைப்படத்தின் பணிகள் முடிந்துவிட்ட பிறகும் அடுத்தக்கட்ட தகவல் இல்லாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து இயக்குனர் குணசேகர் கூறியிருப்பதாவது “இப்படம் புராண இதிகாசமாக உள்ளதால் படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருக்கிறது. இதற்குரிய பணிகளால்தான் தாமதம் ஆகிறது என கூறியிருக்கிறார். சாகுந்தலம் திரைப்படத்தை சமந்தா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருப்பதால் விரைவில் இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.