Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தா சினிமாவிலிருந்து விலகல்….? உண்மை தகவல் என்ன…. வெளியான நியூஸ்…!!!!

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாள சில காலமாக படப்பிடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனால் பேமிலி மேன்-2, புஷ்பா ஸ்பெஷல் பாடல் மூலம் நல்ல கிரேஸை உருவாக்கினார் சமந்தா. இதன் மூலம் பல பாலிவுட் படங்களில் நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டார். தெலுங்கிலும் சகுந்தலம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் குஷி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு, சமந்தா திரைப்படங்களில் இருந்து நீண்ட இடைவெளி எடுக்க முடிவு செய்தார். ஆனால் இந்த முடிவுக்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, படம் தாமதமானால் அது தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர். இதனால் அந்த திட்டங்களில் இருந்து சமந்தா விலகியதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

Categories

Tech |