தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசெய்தன்யாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். இந்த செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பிறகு இருவரும் அவரவர் வேலைகளில் மிகவும் பிசியாக நடித்து வருகின்றனர். நடிகை சமந்தா தமிழில் காத்து வாக்குகளை இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தனது பேஸ்புக்கில் சமந்தாவின் திருமண புகைப்படங்களை பதிவிட்டு “நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு கதை இருந்தது. அது தற்போது இல்லை. அதனால் நாம் புது கதையை அத்தியாயத்தை தொடங்கலாம்” என்று தெரிவித்திருந்தார். புது அத்தியாயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளதால் சமந்தா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.