சன்னி லியோன் நடிப்பில் உருவாகவுள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது .
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஷெரோ திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. தற்போது நடிகை சன்னி லியோன் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். யுவன் இயக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் சதீஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தர்ஷா குப்தா, டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Here we go!! Another awesome project starts!! #OhMyGhost #OMG #SunnyLeone pic.twitter.com/Ss5uR0qjoV
— Sunny Leone (@SunnyLeone) September 7, 2021
வி.ஏ.ஓ மீடியா என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜாவித் இசையமைக்கிறார் . இந்நிலையில் ஓ மை கோஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சன்னி லியோன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.