நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் உருவான திட்டம் இரண்டு திரைப்படம் சமீபத்தில் சோனி லைவில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் டிரைவர் ஜமுனா, பூமிகா, மோகன்தாஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட பூமிகா படத்தை ரதீந்திர பிரசாத் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மாதுரி, விது, சூர்யா கணபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Here’s the trailer of #Boomika Directed @RathindranR Production @StonebenchFilms #Passionstudios @karthiksubbaraj @kaarthekeyens @Sudhans2017 @thinkmusicindia.Premiers on @vijaytelevision Aug 22nd @ 3pm Thank u @Karthi_Offl sir for releasing our trailer https://t.co/aHdyJRu8ms
— aishwarya rajesh (@aishu_dil) August 8, 2021
கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பூமிகா படத்தின் பரபரப்பான டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த படம் வருகிற 22-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.