ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் காக்கா முட்டை படத்தில் நடித்த பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதை தொடர்ந்து இவர் தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, பூமிகா, மோகன்தாஸ் போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திட்டம் இரண்டு படத்தை விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார்.
What mesmerizing lyrics! Do check out this mellifluous song #UnKannanguzhiyil!
🔗 https://t.co/w7VgIEs3Yi#ThittamIrandu #PlanB#PlanBOnSonyLIV #ThittamIranduOnSonyLIV@SonyLIV @vinod_offl @dinesh_WM @vikikarthick88 @gokulbenoy @satish_composer @ministudiosllp@SixerEnt
— aishwarya rajesh (@aishu_dil) July 28, 2021
மேலும் இந்த படத்தில் முரளி ராதாகிருஷ்ணன், ஜீவா ரவி, கோகுல் ஆனந்த், அனன்யா ராம்பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை 30-ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘உன் கன்னங்குழியில்’ என்கிற அழகான மெலடி பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.