Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’… ரிலீஸ் எப்போ?…!!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் ரம்மி, தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு  உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

Aishwarya Rajesh's Thittam Irandu to release on OTT? | Tamil Movie News -  Times of India

இந்நிலையில் திட்டம் இரண்டு படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வருகிற ஜூலை 30-ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் ஐஸ்வர்யா ராஜேஷின் க/பெ.ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |