Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஆண்ட்ரியாவை கஷ்டப்படுத்திவிட்டேன்… ‘பிசாசு 2’ படம் குறித்து பேசிய மிஸ்கின்…!!!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை பூர்ணா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Pisaasu 2: Andrea Jeremiah signs director Mysskin's horror-thriller -  Movies News

இந்நிலையில் பிசாசு 2 படம் குறித்து பேசிய இயக்குனர் மிஸ்கின், ‘பிசாசு படத்தில் பிசாசு தான் முக்கிய கதாபாத்திரம். இந்த படத்திலும் பிசாசு தான் முக்கிய கதாபாத்திரம். அதில் அன்பு, கருணை, பாசம், சின்னதாக ஒரு மெசேஜ் இருப்பது போல் இந்த படத்திலும் இருக்கும். இது தவிர இரண்டு படங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இது வேறு கதை. மேலும் ஆண்ட்ரியாவின் கேரியரில் இந்த படம் மிக முக்கியமான படமாக இருக்கும். அந்த அளவிற்கு அவர் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். நானும் அவரை கஷ்டப்படுத்தியிருக்கேன்’ எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |