மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் தற்போது சாட்டர்டே நைட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தமிழில் 36 வயதினிலே என்ற படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நிவின் பாலியை வைத்து காயங்குளம் கொச்சுண்ணி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் சாட்டர்டே நைட் திரைப்படத்தில் சானியா ஐயப்பன் ஹீரோயினாக நடிக்க, அஜு வர்கீஸ் காமெடி ரோலில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கொச்சியில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் நடிகர் நிவின்பாலி தனியாக ரசிகர்களை சந்தித்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாட்டர்டே நைட் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக 2 நடிகைகள் சென்றபோது ரசிகர்கள் அவர்கள் மீது அத்துமீறும் வீடியோவானது இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதில் ஒரு நடிகை ரசிகர் ஒருவரை அடிப்பதற்காக கையை ஓங்கிய வீடியோவும் இணையதளத்தில் வெளியாகியது. மேலும் இது போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக தான் நிவின் பாலி மட்டும் தனியாக பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.