Categories
தேசிய செய்திகள்

நடிகர் ஷாருக்கானின் மகனுக்கு ஜாமின் மறுப்பு… நீதிமன்றம் அதிரடி..!!

போதைப்பொருள் பயன்படுத்தி வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

கடந்த வாரம் சனிக்கிழமை இரவு அன்று மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் கேளிக்கை விருந்து நடத்திய விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட 18 நபர்களை தற்போது வரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்..

இந்த வழக்கில் ஆர்யன் கான் உள்ளிட்டோரை நேற்று வரை என்சிபி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.. இதையடுத்து போலீஸ் காவல் முடிந்து, ஆர்யன் கான் உள்ளிட்டோர் மும்பை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். நேற்றைய தினம் இந்த வழக்கில் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது..

இந்த நிலையில் தான் தனக்கு ஜாமின் வழங்கக்கோரிய மனு மீதான விசாரணை இன்று காலை 12 மணியிலிருந்து மும்பை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது ஜாமீன் மனு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.. விசாரணை என்பது காலையில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்றது. அவருக்கு ஜாமீன் கிடைத்து அன்றைய தினமே வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக ஜாமீனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நீதிமன்ற காவல் நேற்று பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆர்யன் கான் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.. முதல்கட்டமாக தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக சிறை நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது..

இன்றைய நாள் இந்த வழக்கில் என்பிசி தரப்பில், 18 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.. வெளிநாட்டில் உள்ளவர்களும் இதில் தொடர்பிருக்கிறது.. ஆர்யன் கானுக்கு  ஜாமீன் வழங்கினால் விசாரணை என்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்ததன் அடிப்படையில் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது..

Categories

Tech |