நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முனீஷ்காந்த், காளி வெங்கட், முரளி ரேஷ்மா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1st single from #Aalambana wrapped up & ready for you!#EppaPaarthaalum in @ArmaanMalik22’s terrific voice coming up for you tomorrow at 5️⃣PM ❤️
🎶 @hiphoptamizha
🖊 @poetpaavijay @koustubhent @dir_parikvijay @actor_vaibhav @paro_nair @sonymusicsouth @proyuvraaj @gobeatroute pic.twitter.com/YUz9SmrA4Y— KJR Studios (@kjr_studios) July 29, 2021
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். மேலும் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ஆலம்பனா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை ஜூலை 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ‘எப்ப பார்த்தாலும்’ என்கிற பாடல் வெளியாக உள்ளது.