வெங்கடேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம்-2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் வெங்கடேஷ். கடைசியாக இவர் நடிப்பில் உருவான நாரப்பா திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது. இந்த படம் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டான அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். தற்போது வெங்கடேஷ் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம்- 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மீனா, எஸ்தர் அனில், கிருத்திகா, நதியா, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனுப் ருபன்ஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரிஷ்யம்-2 படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இந்நிலையில் தெலுங்கு திரிஷ்யம்-2 படத்தின் பரபரப்பான டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி இந்த படம் நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.